இலங்கை

முகக்கசவம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படும் என்று பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் நிலை அகலும் வரை, அதனை கட்டுப்படுத்தப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அத்தியாவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளை ஏற்று நடக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று மாதங்களாக பேணப்பட்டு வந்த சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விடயங்ளுக்கு முரணாக செயல்படும் அனைவருக்கும் எதிராக, தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, வழக்குத் தொடரப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.