இலங்கை

கடந்த நல்லாட்சிக் காலத்தில் அரச வங்கிகள் வழங்கிய அவசியமற்ற கடன்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஆணைக் குழு ஸ்தாபிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச வங்கிகளில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்தும் பிரதமர் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தினார்.

இந்த விடயம் குறித்து ஆராய குழுவொன்றை அமைத்து அதனூடாக விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள பிரதமர் தீர்மானித்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.