இலங்கை

“எந்தக் காலத்திலும் யாரும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது. ஆகவே, அது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டமொன்று வடமராட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களுக்கு சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு அவசியம். அதற்காக நாம் முழுமையாக செயற்பட்டோம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயமான தீர்வு என சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளும்படி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் செயற்பட்டார்.

மாற்று அணியென கூறிக்கொள்பவர்களால் 5 ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமா? அவர்கள் தமிழர்களை சின்னபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.