இலங்கை

“முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிதியை திருப்பி அனுப்பியவர்.” என்று வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.  

“விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றார்?.” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே சி.தவராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபை தேர்தலின்போது, தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவோம் என முழக்கமிட்டனர். ஆனால் ஒரு இராணுவ சிப்பாயை கூட அவரால் வெளியேற்ற முடியவில்லை.

இவர்கள் இதனைத்தான் செய்யவில்லை என்று பார்த்தால், வடக்கு மாகாண சபைக்கு கிடைத்த பெருமளவான அபிவிருத்தி நிதியை குறித்த திட்டத்திற்கு தனது உறவினரை நியமிக்கவில்லை என்பதற்காக அந்த நிதியை திருப்பி அனுப்பிய அரசியல்வாதிதான் இவர்.

மாகாண சபையினை ஆட்சி செய்தபோது மக்களுக்கு எதனையும் செய்யாத இவர், இலங்கைக்கு முதல் தடவையாக பாரத பிரதமர் மோடி வருகைதந்தபோது, தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி எவையும் பேசாது, இந்தியாவில் பல பெண்களை சாமியார் என்ற போர்வையில் கற்பழிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தா என்ற சாமியாரை விடுவிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

வடக்கு மக்களுக்கு பல ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க கற்பழிப்பு சாமியாரை விடுவிக்க வலியுறுத்தி மோடிக்கு கடிதம் கொடுத்தார். இதுதான் மாகாண சபையில் ஆட்சியில் இருக்கும்போது ஆற்றிய பணி.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.