இலங்கை

“பொதுத் தேர்தலுக்குப் பின்னரான புதிய அரசாங்கத்துடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் ஆலோசனைகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப்பட வேண்டும். அதில் அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டே தீர வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக நிற்கின்றது. அதற்காகப் பொதுத்தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த நாம் தயாராக இருக்கின்றோம்.

நாம் பலமான அணியாக பாராளுமன்றம் சென்றால்தான் அரசாங்கத்துடன் காத்திரமான பேச்சுக்களை மேற்கொள்ள முடியும். எனவே, இம்முறை தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் கடந்த முறையையும் விட அதிகரிக்கப்பட வேண்டும். அந்தப் புனிதமான கடமையை எமது மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாகத் தவறாது செய்ய வேண்டும். எமது மக்களின் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.