இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் கட்டங் கட்டமாக தளர்த்தப்பட்டது.

அத்துடன், கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 04.00 மணிவரை மாத்திரம் ஊரடங்கு அமலில் இருந்தது வந்தது.

இந்நிலையில், இன்று தொடக்கம் ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்க தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.