இலங்கை

வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவை வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு பயணிகள் சேவைக்காக ஓகஸ்ட் முதலாம் திகதி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், தற்போது இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை வெளிநாடுகளில் உள்ள 50,000க்கும் அதிகமான இலங்கையர்கள், இலங்கைக்கு வருவதற்கு அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்களில் தம்மைப் பதிவு செய்துள்ளனர். அவர்களை படிப்படியாக நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.