இலங்கை

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால், அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது இறந்துபோய் இருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகின்றார்.

ஒரு விடயத்தை இராணுவத் தளபதி மறந்துவிட்டார் அதாவது சரணடைந்தவர்கள், பொதுமக்களுக்கு முன்னால் சரணடைந்தவர்கள், தமது பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்கள் இவர்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் இறந்து போனதுக்கான காரணம் என்ன சரணடைந்தவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் இறந்து போய்விட்டார்கள் என்று கூறினால் எவ்வாறு இறந்து போனார்கள்? எவ்வாறு கொலை செய்யப்பட்டார்களா? யாரால் கொல்லப்பட்டார்கள்?

ஆகவே ஒரு இராணுவ தாக்குதலின்போது, இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுக்கு அப்பால் ஒரு அரசாங்கத்திடம் சரனடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால் அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும்” என்றுள்ளார்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.