இலங்கை

“2009ஆம் ஆண்டு போரில் நாம் வெற்றி கண்டதன் பின்னரும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிநாடுகள் தலையீடுகளைச் செய்தன” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்பது என்ற தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “1970இல் ஒரு சோசலிச அரசாங்கம் இலங்கையில் ஆட்சியைப் பிடித்தபோது, ரஷ்ய அல்லது சீன தலையீட்டின் மூலம் அது ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டதாக யாரும் கூறவில்லை. அதேபோல், ஒரு முதலாளித்துவ அரசாங்கம் 1977இல் ஆட்சியைப் பிடித்தது, ஆனால் அது அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் தலையீட்டின் மூலம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டதாக யாரும் கூறவில்லை.

எவ்வாறாயினும், 2015 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் இதற்கு முன் அனுபவிக்காத அளவிற்கு வெளிநாட்டு தலையீடு இருந்தது குறிப்பாக 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் போட்டியிட தீர்மானித்திருந்த நிலையில் அதனை மாற்றி பொது வேட்பாளர் நிறுத்தவைக்கப்பட்டதன் பின்புலத்தில் யார் இருந்தார்கள்.

2009இல் நாங்கள் போரை வெற்றிகொண்ட பின்னர் சில வெளிநாட்டு சக்திகள் இந்த நாட்டின் அரசியலில் ஒரு முக்கிய வழியில் தலையிடத் தொடங்கின. அந்தப் போரை எங்களால் வெல்ல முடியும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.

இந்த தலையீடு உண்மையில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தொடங்கியது, ஆனால் இந்த நாட்டு மக்கள் அந்த ஆரம்ப முயற்சியை உறுதியாக தோற்கடித்தனர். எவ்வாறாயினும், சதி 2015 வரை தொடர்ந்தது.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு துறையினர் மற்றும் முப்படையினர் என பலர் கைது செய்யப்பட்டு, வாரங்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர், மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பிளவுக்கு வழிகோலும் நோக்கத்துடன் இவை அனைத்தும் செய்யப்பட்டன. குறிப்பாக போரின் மூலம் அவர்களால் சாதிக்க முடியாதவை, அரசியல் சூழ்ச்சிகள் மூலம் சாதிக்க முயன்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபின் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்சினையாக கொரோனா வைரஸ் தொற்றை நாம் வெற்றிகராமாக எதிர்கொண்டோம்.

குறித்த வைரஸினால் உலகளவில் பலர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்து வந்த நிலையில் இலங்கை அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டது. குறிப்பாக நியூஸிலாந்தை விட கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதில் இலங்கை உலகில் முதலிடத்தில் உள்ளது” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.