இலங்கை

மனிதாபிமானமற்ற ரீதியில் தொடர்ந்தும் செயற்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். 

மோதரையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், இந்த அரசாங்கம் மக்களுக்காக எந்த நிவாரணத்தை வழங்கியுள்ளது என கேட்க விரும்புகிறேன்.

உலகிலேயே இன்று எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இல்லை.

இதுவா மக்கள் ஆட்சி? நாம் ஒகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று, அரசாங்கத்தை ஸ்தாபித்து 24 மணிநேரத்தில் எரிபொருளின் விலையை குறைப்போம் என்பதை இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்கூட மக்களுக்கு ஒழுங்காக சென்றடையவில்லை. இந்த அரசாங்கத்தக்கு மக்களின் துயரம் தெரியவில்லை. மனிதாபிமானமே இல்லாமல்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த பொய்யான அரசியல் கலாசாரத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.