இலங்கை

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒருபோதும் நம்ப முடியாது. அவர் துரோகமிழைக்கக் கூடியவர். அவரோடு இருப்பவர்களை தோற்கடிக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுன ஒரு ஒப்பந்தத்தை சுதந்திரக் கட்சியுடன் மட்டுமே செய்துள்ளது. அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் அவரை நம்ப முடியாது.

தேர்தலுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதியும் அவரது குழுவும் அமைச்சரவையில் பதவிகளை பெற்றுகொள்வது தொடர்பாக நிபந்தனைகளை விதிக்கலாம். எவ்வாறாயினும், அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதாக சுதந்திரக் கட்சியுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் எந்த நிபந்தனைகளும் இல்லை.

இன்று எதிர்க்கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மக்களுடனான நெருக்கத்தை தடுக்க போராடுகின்றது. ஒரு வலுவான நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு நிலையான மற்றும் ஒன்றுபட்ட அரசாங்கம் இருக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின்போது ரணில் விக்ரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான மோதல்கள் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தின. எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு விடயத்தை நடக்க நாங்கள் விரும்பவில்லை.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.