இலங்கை

உடல் நலக் குறைவுடன் அரசியலில் ஈடுபட்டுவரும் சிரேஷ்ட தலைவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி, புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஹொரவப்பொத்தனை பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் பலவந்தமாகவே மீண்டும் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டேன்.

தங்களை அரசியல்வாதிகள் எனக்கூறிக்கொண்டு பாராமன்றத்திற்குள் நுழையும் பெரும்பாலானோர் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டுச்செல்ல மாட்டார்கள் என்பதை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நான் புரிந்துகொண்டேன். அத்துடன் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே பாராளுமன்றத்திற்குள் நுழைகின்றனர். இத்தகையானவர்களுடன் அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை.

இதேவேளை தற்போது உடல் நல குறைவுடன்அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் தலைவர்கள், ஓய்வுப்பெற்று புதியவர்களுக்கு இடமளிப்பார்களாயின் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும்.” என்றுள்ளார்.

 

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.