இலங்கை

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கடந்த காலத்தில் பிரிந்திருந்தனர். ஆனால், எதிர்வரும் காலத்தில் இரு சமூக மக்களும் இணக்கமாக வாழும் சூழல் ஏற்படும்.” என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கடந்த காலத்தில் யுத்தம் என்ற ஒரே ஒரு காரணத்தினால் பிரிந்திருந்த நிலமை இப்போது மாறியிருக்கின்றது. இரு சமூகங்களும் இணைவதற்கு இப்போது ஆயிரம் நன்மையான காரணங்களுள்ளன. அதனால் எதிர்காலத்தில் இரு சமூகங்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழும் சூழல் மேலும் வலுப்பெற வேண்டும. அதற்காக நாங்கள் உழைக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே விஜயதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்கள். ஆனால், தமிழ் சிங்கள சமூகங்கள் தங்களுக்கிடையே சந்தேகங்களை வளர்த்துப் பிளவு படவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

ஆனால் இன்று நிலைமை முற்றாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் அந்த நிலையை நாங்கள் மேலும் வெளிப்படுத்தி நமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து இந்த நாட்டை பொருளாதார ரீதியாகவும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் வேண்டும்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.