இலங்கை

அலுவலக நேரங்கள் ஆரம்பிப்பதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரை அடங்கிய அறிக்கையை நேற்று செவ்வாய்க்கிழமை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளதாக குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை பேணவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் அரச மற்றும் தனியார் செயற்திறனை மேம்படுத்தவும் அரச மற்றும் தனியார் அலுவலக நேரங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமையவே குழு நியமிக்கப்பட்டதோடு குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் அரச அலுவலக நேரம் காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.45 மணியாகவும் தனியார் அலுவலக நேரம் காலை 09.45 மணியிலிருந்து 06.45 மணியாகவும் இருக்கும் வகையில் திருத்தம் செய்யுமாறு பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சுக்கும் அமைச்சரவைக்கும் சமர்ப்பித்து இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாக அமைச்சர் அமரவீர கூறியுள்ளார்.

இந்தக் குழுவில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகள் அடங்கியிருந்தனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.