இலங்கை

நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு - தெற்கு என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை காலை தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், 2005 - 2010ஆம் ஆண்டுகளில் எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டன. அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் திட்டங்களுடன் எங்கள் அரசாங்கம் செயற்பட்டது.

எங்கள் அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தவிர, முந்தைய நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை. வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அந்த மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்பட்டது.

அந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினையான குடிநீர் சிக்கலுக்கு தீர்வு வழங்குவதற்காக எங்கள் அரசாங்கம் முதலிடம் வழங்கும். அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும்.” என்றுள்ளார்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.