இலங்கை

“பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் ஓர் ஆசனத்தைக்கூட வெற்றிபெற முடியாத மாற்று அணியினர், எம்மை விமர்சிக்கின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மாற்று அணிகள் என்ற பெயரில் களமிறங்கியுள்ள தமிழ்க் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் ஓர் ஆசனம் கூடப் பெறுவது சந்தேகமே. அப்படிப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது அதன் தலைமையையோ விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள்.

இவர்களுக்குத் தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஓர் அணியாகத் தேர்தலில் களமிறங்கியிருக்கலாம். ஆனால், இவர்களோ பிரிந்து, பிரிந்து நின்று போட்டியிடுகின்றார்கள். தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில்தான் இவர்கள் இவ்வாறு பிரிந்து நிற்கின்றார்கள். தேர்தலில் இவர்களுக்குத் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளினால் பதிலடியைக் கொடுப்பார்கள். போலித் தமிழ்த் தேசியம் பேசித் திரிபவர்கள்தான் இந்த மாற்று அணியினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது மட்டும்தான் இவர்களின் வேலை.” என்றுள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.