இலங்கை

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை முறைமை தன்னால் பாதுகாக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன். அதே போன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன்.

கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தனது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையில் திட்டத்தை உருவாக்குவேன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13 அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன். ஒருருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.