இலங்கை

பொதுத் தேர்தல் கண்காணிப்புக் கடமையில் 5,000 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக பஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  

இவர்களில் நீண்டகால கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குவதோடு, தபால் மூல வாக்களிப்புக்கும் குழுவொன்று ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறை பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடு முழுவதிலுமுள்ள மாவட்டங்களிலிருந்தும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதோடு, தேசிய பட்டியல் மூலம் 29 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்புக்கான கண்காணிப்புக்காக, அரசியல் ரீதியில் அதிக ஆர்வமுள்ள பிரதேசங்கள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிமுள்ள பிரதேசங்களைக் கருத்திற்கொண்டு, 856 வாக்கெடுப்பு நிலையங்களை தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக 3,000 பேரை ஈடுபடுத்துவதற்காக பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்களிப்பு நிலையத்திற்கு இடையிலான நிலைமையைக் கண்காணிப்பதற்கான நடமாடும் கண்காணிப்பு பணியில் 200 பேர் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, இதற்காக 1,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களிலும் கண்காணிப்பாளர்களை நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 5,000 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.” என்றுள்ளார்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.