இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், குழப்பகரமானதாக மாறிவிட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தற்போதைய அரசாங்கம் தன்னைத் தானே அவமானப்படுத்திக்கொள்ளும் அரசாங்கமாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிற்கு பெருமையைக் கொண்டுவந்த கிரிக்கட் வீரர்களை அவமானப்படுத்தி தற்போதைய அரசாங்கம் குழப்பத்தினை ஏற்படுத்துகின்றது. தேசிய ரீதியில் மஹேல ஜெயவர்த்தனவிற்கும், குமார் சங்கக்காரவிற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் நாட்டின் கீர்த்தியினை அபகீர்த்தியாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட போது சங்காவும், மஹேலவுமே நாட்டிற்கு கீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டனர். இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மறந்துவிடக் கூடாது.” என்றுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.