இலங்கை

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை, குடாவெல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு - கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாதென எதிர்க்கட்சியினால் பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அது போன்றே இம்முறை பொதுத் தேர்தலிலும் அந்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றனர்.

தெற்கு மக்களின் வாக்குளில் அதிகளவாக வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் கைவிடப்பட மாட்டார்கள், அந்த மக்களை வெற்றிக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

வடக்கு - கிழக்கு மக்களை வெற்றிக் கொள்ளும் போது, தெற்கு இளைஞர்களின் ஆதரவு அவசியம். வடக்கு - தெற்கு பேதமின்றி ஒன்றாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவும் அனைத்து சந்தர்ப்பத்தில் எமது அரசாங்கம் செயற்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளமை, தொழிற்சாலை மற்றும் திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டமை காரணமாக தற்போதைய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தொழில் இல்லாத பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக விரைவில் உருவாகும் எமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வோம்.” என்றுள்ளார்.

 

 

 

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.