இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இனங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தி இலாபம் ஈட்டுவதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 

எனவே, ராஜபக்ஷக்களின் இவ்வாறான சிந்தனையை தோற்கடிக்க, நாட்டில் புதிய ஆரம்பம், புதிய ஆட்சி முறை, புதிய சிந்தனையாளர்களே தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக்கான அலுவலகம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 150இற்கும் மேற்பட்ட கிராமங்களை உருவாக்கியதுடன் ஆயிரக்கணக்கான வீடுகளையும் அமைத்துள்ளேன். இலங்கையில் அதிகளவான வீட்டுத் திட்டங்களை இங்கு நான் அமைத்துள்ளேன்.

நான், தமிழ் மக்களின் கடந்த கால வேதனைகளை உணர்ந்தவன். அதன் காரணமாக கடந்த காலத்தில் இந்த மாவட்டம் தொடர்பாக விசேட கவனம் செலுத்திவந்தேன்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒருவரைத் தெரிவுசெய்து எனக்குத் தந்தால் அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கி இந்த மாவட்டத்திற்குத் தேவையான அனைத்த வேலைத் திட்டங்களையும் செய்வதற்கு தயாராகியிருக்கின்றேன்.

நாங்கள் இன்னுமின்னும் போலியான கருத்துகளுக்கும் உணர்வுமிக்க வழிகாட்டலுக்கும் பின்னால் சென்று எமது சமூகத்தினை தவறான பாதைக்கு கொண்டுசெல்லாமல் அவர்களை சிறந்தவர்களாக மாற்றுவது ஒவ்வொருவரது கடமையாகும்.

இந்த நாட்டில் வறுமை நிலை உச்சத்தில் இருக்கின்றது. இந்நிலையில் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. நான் ஆட்சியமைக்கும் பட்சத்தில் இந்த நாட்டில் வறுமை நிலை நீக்கப்பட்டு குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கான விசேட ஏற்பாடுகளைச் செய்வேன் என உறுதியளிக்கின்றேன்.

இந்த நாட்டில் புது ஆரம்பம் தேவை, புதிய ஆட்சிமுறை தேவை, புதியதாக சிந்திப்பவர்கள் தேவை. அவற்றின் மூலமே இந்த நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்தமுடியும். அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு நான் தாயராகயிருக்கின்றேன்.

தற்போதுள்ள அரசாங்கம் இந்த நாட்டில் இனங்களிடையே மதங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் வேலைத் திட்டங்களையே முன்னெடுத்துவருகின்றது. தமிழர்களுக்கு விரோதமாக முஸ்லிம்களையும், முஸ்லிம்களுக்கு விரோதமாக சிங்களவர்களையும், தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களையும் பகைமையூட்டி இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசாங்கம் அரசியல் இலாபமீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.