இலங்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

களுத்துறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிலர் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த போதிலும் அவ்வாறான ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை. எதிர்காலத்தில் கட்சியின் ஆலோசகராக நான் செயற்பட்டு இளைஞர் பரம்பரைக்கு கட்சியை ஒப்படைக்கவுள்ளேன். சம்பிரதாய அரசியலில் இருந்து மீண்டு கல்வியறிவு மிக்க புதிய சிந்தனைகளை உடைய இளைஞர்களுக்கு சுதந்திர கட்சியை பாரப்படுத்தவுள்ளேன்.” என்றுள்ளார்.

 

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.