இலங்கை

மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடுவலை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு இந்த அரசாங்கம் தொடர்பாக தற்போது அச்சமான உணர்வொன்று ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட எதையும் நிறைவேற்றாத, செயற்றிறன் அற்ற ஓர் அரசாங்கமே இருக்கிறது.

மனிதாபிமானம் இல்லாத, மக்களை ஏமாற்றி வரும் அரசாங்கமே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகிறது. கொரோனா காலத்தில் கூட, மக்களுக்கு இந்த அரசாங்கம் முறையான நிவாரணங்களை வழங்கவில்லை.

நாம் பத்திரிகை செய்திகளுக்காக உறுதி அளிப்பவர்கள் அல்ல. நாம் கூறினால், அதனை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

இன்று நாட்டில் மொட்டுக் கட்சியினரும், மத்திய வங்கிக் கொள்கையர்களும் இணைந்து என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எமது வேலைத்திட்டங்களை பார்த்து அஞ்சியே இவ்வாறான விமர்சனங்கள் வருகின்றன. நாம் இவற்றை பார்த்து என்றும் தயங்கப் போவதில்லை.” என்றுள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.