இலங்கை

“திருகோணமலை தமிழ் மக்களின் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “திருகோணமலையில் மிக நீண்ட காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும்.

இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த மக்கள் ஆணையைப் பெற வேண்டும். இந்த ஆணையானது நாங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அரசுடனும், சர்வதேசத்துடனும் பேச்சுகளை நடத்த ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்தத் திருகோணமலை மண்ணில் பாரம்பரியமாக – நூற்றாண்டுக்கணக்காக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள் என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டுமாக இருந்தால் சிறந்த ஆணையை திருகோணமலை மாவட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். அற்ப சொற்பமான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகளுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து அதைச் சீரழிக்க வேண்டாம்” என்றுள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.