இலங்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் முற்பகல் 07.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை தேர்தல்களுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்று வந்தது. ஆயினும், கொரோனா பரவில் நிலை காரணமாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு மேலும் ஒரு மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஓகஸ்ட் 05ஆம் திகதி, முற்பகல் 07.00 – பிற்பகல் 05.00 மணி வரை வாக்களிக்க முடியும் என மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலமாக காணப்பட்டதை கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நேரம், முற்பகல் 07.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை, ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.