இலங்கை

‘இலங்கை அரசியலமைப்பின் ஒற்றையாட்சியைப் பேணி பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு, ‘ஒரு நாடு இரு தேசம்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போலித்தேசியம் பேசி வருகின்றனர்’ என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா தெரிவித்துள்ளார். 

“முன்னணியினர் கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்றால், உழைப்புக்காக சட்டத்தரணி தொழிலைக்கூட செய்திருக்கக் கூடாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

சி.தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசமைப்பு என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தேசம் எனக்கோசம் போடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்று அந்த அரசமைப்பைப் பாதுகாப்போம் என சத்தியம் செய்தே தற்போதைய தேர்தலில் களம் இறங்கியுள்ளனனர்.

தங்களது உரைகளில் ஒரு நாடு இரு தேசம் என பேசிவரும் இவர்கள், இலங்கை அரசியலமைப்பின் இரண்டாம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றையாட்சி முடியரசை பேணிப்பாதுகாப்போம் என்று கையெப்பமிட்டுவிட்டே மக்களிடம் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வாக்குகளுக்காக திரிகின்றனர். ஒற்றையாட்சி அரசமைப்பை பாதுகாப்போம் என கையெப்பமிட்டுவிட்டு இவர்கள் என்னத்தை செய்வதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்” என்றுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.