இலங்கை

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வீரக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையில் மாற்றம் மேற்கொள்ளுதல், 19வது திருத்தத்தை நீக்குதல், அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற பிரதான விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட சிறந்த வெற்றியை நெருக்கமாக்கி கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்க்கின்றது.

ஐக்கிய தேசிய்க கட்சி பிளவுப்பட்டுள்ளமை ஊடாக இதுவரையில் பாரிய அளவிலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு ஆயத்தமாகியுள்ள நிலையில், குறித்த அனைவரையும் இணைத்துக் கொண்டு மூன்றில் இரண்டு சிறந்த வெற்றியை நோக்கி பயணிக்கும் அத்தியாவசிய சந்தர்ப்பம் இதுவாகும்.

இம்முறை பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களின் எண்ணிக்கையை வெற்றி கொள்வதற்காக இளைஞர்களை பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். எதிர்கால தலைமைத்துவத்திற்காக வலுவான கட்சிக்கு, வலுவான அரசாங்கத்திற்கு உறுப்பினர்களாகுவற்காக அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பின்வாங்காமல் வருவார்கள் என நான் நம்புகிறேன்.” என்றுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.