இலங்கை

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பொலனறுவைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது சுமார் மூன்று ஆண்டுகளாக மாகாண சபை இல்லை. எனது அரசாங்கத்தில் இருந்த பிரதமரே பல்வேறு பாராளுமன்ற குழுக்களை நியமித்து மாகாண சபைத் தேர்தலை இல்லாது செய்துவிட்டார்.

இந்த நிலையிலேயே, குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தருமாறு நாம் கோருகின்றோம். அரசியல்வாதிகளின் அரசியல் கலாசாரம் சிதைவடைந்துள்ளது.

அரசியல்வாதிகள் பலர் ஊழல் மோசடிகளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்கள். இவை அரசியல் குழப்பத்தின் ஒரு பகுதியாகும். அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எடுத்துக் கொண்டால், இவற்றை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும்.

எதிர்க் கட்சியினருக்கு பாராளுமன்றப் பலம் சென்றால் நாடு பாரிய பிரச்சினைக்கு தள்ளப்படும். அரசாங்கம் ஒரு கட்சியாகவும், ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் இருந்தால் நாடு அழிவடைகின்றது. எனக்கு அதுவே நடந்தது. நான் பொலன்னறுவை என்பதால் என்னை எப்படியாவது மடித்து எடுக்க முடியும் என நினைத்துக் கொண்டு, அவரின் கட்சியினருடன் கலந்துரையாடி பொது வேட்பாளராக என்னைத் தெரிவு செய்தார். ஆனால் அவர் கூறிய விடயங்களை நான் செய்யவில்லை. அதனால், அவரது தந்திரம் நிறைவேறவில்லை. இதனால் தொடர்ந்தும் மோதல் ஏற்பட்டது.” என்றுள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.