இலங்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “19வது திருத்தத்தில் இருந்து அல்லாமல் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒவ்வொரு பகுதியை இணைக்காமல், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உறுதியான அதிகாரம் வேண்டும். இல்லாவிட்டால், அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது ஒவ்வொருவரின் பணயக் கைதிகளாக வேண்டிவரும்.” என்றுள்ளார்.

 

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.