இலங்கை

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பான விசேட அறிவித்தலொன்று பொலிஸ் தலைமையகத்தினால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிவித்தலிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலின் பிரகாரம் ஓகஸ்ட் 02ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுடன் தேர்தல் முடிவுகள் வெளியாகி 7 நாட்களுக்கு எந்தவொரு பேரணியையும் நடத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீடுவீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் போது வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு செல்ல முடியாது என்பதுடன் அவ்வாறாக வேட்பாளர் ஒருவருக்காக 3 பேர் மாத்திரமே வீடு வீடாக செல்ல முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின், அரசியல் கட்சிகளின் மற்றும் சுயேட்சை குழுக்களின் கொள்கை பிரகடனங்கள், சின்னம், புகைப்படம், துண்டுபிரசும், இலக்கம் மற்றும் போஸ்டர் போன்றவற்றை வீடுகளுக்கு விநியோகிக்க முடியும்.

ஆனபோதும் அவற்றை வீதியில் பயணிக்கும் போது காட்சிப்படுத்தவோ வீட்டாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டுக்கு வீடு செல்லும் போது ஒலி பெருக்கிகள் மற்றும் இசை கருவிகள் பயன்படுத்தக் கூடாது. விருப்பு இலக்கம், சின்னம் ஆகியன உள்ளடங்கிய ஆடைகளும் அணிந்துக்கொண்டும் இந்த நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது எனவும் ஆறிவிக்கப்பட்டுள்ளது.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.