இலங்கை

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது.” என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறுவதுடன் கோட்டபாய ராஜபக்ஷவே ஜனாதிபதியாக உள்ளார் என்பதால், அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு அதிமாகவுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் கட்சி சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று வியாழக்கிழமை பனங்கட்டுகொட்டு பகுதியில் திறக்கப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போது தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120-130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள். இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பின் 19வது திருத்ததை இல்லாமல் செய்வதுடன், அவர்களின் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள்.

ஆனாலும், இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்காது. இப்படியான சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்குக் கேட்கின்றார்கள்.

இப்படியிருக்கும் போது அவர்களின் உறவுகள் மூலமே வாக்குகளைப் பிரித்துவிடலாம் என்று ஏனையவர்கள் நினைக்கின்றார்கள். எனவே மக்கள் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டும் கடந்த காலத்தை எண்ணியும் வாக்களிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.