இலங்கை

“முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் எனது ஆட்சிக் காலத்திலும் இருந்தனர். ஆனால், அனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழ வைப்பதே எமது இலக்கு.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

மக்களின் ஜனாநாயக உரிமைகளை இழக்கச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முஸ்லிம் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன கூட்டம் குருநாகலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சகல இனங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பிலுள்ள சில சரத்துகளினால் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தப்படுகிறது. சகல இனத்தவர்களையும் இணைக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.” என்றுள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.