இலங்கை

“மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருக்கின்றோம்.” என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

வாக்குரிமைபெற்ற ஒவ்வொரு பிரஜையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஒன்றியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி எவரும் வாக்களிப்பதை தவிர்க்கக்கூடாது. எமது நாடடில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒன்றிரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டபோதும் பெரிய அளவில் தொற்றுப் பரவல் காணப்படவில்லை. தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் பெருந்தொகையினராக வந்தால் கொரோனா தாக்கம் ஏற்படலாமென சிலர் அச்சுறுத்துகின்றனர். ஆனால் அவ்வாறான தாக்கம் எதுவும் ஏற்படாத வகையில் நாம் சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பில் அனைத்து ஊடகங்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா அச்சத்திலிருந்து மக்களை விடுபடச் செய்ய வேண்டும். மக்கள் வாக்களிக்கத் தவறினால் அது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்தார். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பை வலியுறுத்திய ஆணைக்குழுத் தலைவர் பக்கச்சார்பின்றியும், ஒருதரப்பை மட்டும் உயர்த்திப் பிடிப்பதையும் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்படும் விதத்தில் ஊடகங்கள் நடந்து கொள்ளக்கூடாது. தேர்தல் குறித்து மக்கள் அதிருப்தி கொள்ளும்வகையில் தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் முற்றாக தவிர்க்கவேண்டும்.” என்றுள்ளார்.

 

 

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.