இலங்கை

தமிழர் தலைநகரமான திருகோணமலையையும், பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரத்தையும் யாருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம். பாடல்பெற்ற தளங்களில் ஒன்று. இதற்கு பௌத்த மதத்தலைவர்கள் உரிமை கோரமுடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோணேஸ்வரம் ஆலயம் பற்றி எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளித்த இரா.சம்பந்தன், தேரரின் கருத்தை அடியோடு மறுப்பதாகவும் கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தொல்பொருளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தமிழர்களின் பூர்விக இடங்களையும் இந்துக்களின் புனித தலங்களையும் மாற்றியமைக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி செயலணி மேற்கொள்ள முடியாது. அதற்கு இடமளிக்கப்போவதில்லை.

இனவாதம் மற்றும் மதவாதம் பரப்பும் செயற்பாட்டில் ஜனாதிபதி செயலணி செயற்படுமாக இருந்தால், அது நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.