இலங்கை

எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கைகளும் தலையீடுகளும் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

புலனாய்வு அதிகாரிகள் சில வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் எங்கு செல்கிறார்கள், எங்கு கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்களைத் திரட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராஜா முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இராணுவம் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.

ஜூலை ஐந்தாம் திகதி எங்களின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி இரண்டு தடவை தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதனின் வாகனம் முல்லைத்தீவில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது வாகனத்தில் அடையாள அட்டை அளவைக்கொண்ட வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட காட் காணப்பட்டுள்ளது. அவை முறையானவை. ஆனால், இராணுவம் வாகனத்தை நிறுத்தி அட்டைகளை பறிமுதல் செய்தது.

தேர்தல் ஆணைக்குழு கடந்த 17ஆம் திகதி அன்று ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் அளித்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளில் தேர்தலின் போது இராணுவம் நிறுத்தப்பட மாட்டாது, பொலிஸார் மட்டுமே பயன்படுத்தப்படுவர், சுகாதார வழிகாட்டுதல்கள் வர்த்தமானி செய்யப்படும் என்றார்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.