இலங்கை

“சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்தமையை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக மீள் ஏற்றுமதியை நிறுத்தியதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை கலிகமுவயில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விவசாய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கமாகும். 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான எங்கள் ஆட்சியின் போது நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாய மக்களுக்கும், விவசாயத்திற்கும், உரிய அங்கீகாரம் கிடைத்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் விவசாயத்தை கவனிக்காமல் விட்டது.

தேசிய டயர் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இதுவரையிலும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தேசிய இறப்பர் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசாங்கம், துப்பாக்கியை கையில் எடுத்த பயங்கரவாதிகளுடன் போரிட்டதே தவிர தமிழ் மக்களுடன் அல்ல. சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்ததனை பாக்கியமாக கருதுகிறேன். பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினாலேயே இன்று நாட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

நாட்டின் மேலதிக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

 

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.