இலங்கை

இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 297 பேர் கொரோனா வைரஸ் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்திலிருந்த 283 பேர், இந்தியாவிலிருந்து வந்த 09 பேர், பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவர், துபாயிலிருந்து வந்த 03 பேர், வெலிக்கடை சிறைச்சாலையிருந்த மற்றுமொரு கைதி, கந்தக்காடு தொற்றாளருடன் தொடர்பைப் பேணிய 03 பேர் ஆகிய 300 பேரே இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

அடையாளம் காணப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கைதி, இலங்கையில் 2,078 ஆவது நபராக அடையாளம் காணப்பட்ட கைதியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர் என, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்றையதினமே இதுவரை அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் (300) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த மே 27ஆம் திகதி ஆகக் கூடுதலாக 150 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

நேற்று இரவு 10.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,454 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,979 இலிருந்து 1,980 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்திலிருந்த 56 பேர் மற்றும் அதில் ஆலோசக விரிவுரையாளராக பணியாற்றும் மாரவிலவைச் சேர்ந்த பெண் ஒருவர், கட்டாரிலிருந்து வந்த ஒருவர், கடற்படையைச் சேர்ந்த ஒருவர், பங்களாதேஷிலிருந்து வந்த ஒருவர் ஆகிய 60 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, நேற்றையதினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, ஒருவர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 950 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 906 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 895 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டவர் 31 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 815 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 846 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,454 பேரில் தற்போது 463 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 1,980 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 2,454
குணமடைவு - 1,980
சிகிச்சையில் - 463
மரணம் - 11

 

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.