இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சி என்கிற ஆலயத்தில் இருந்து பிரிந்து சென்ற தரப்பினரால், நாட்டு மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கிருலபன பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டீ.எஸ்.சேனநாயக்க உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.