இலங்கை

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது. 

இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது. அதன் பிரகாரம் இன்று, நாளை மற்றும் 15, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் இருக்கும் சுகாதார சேவைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் அனைவரும் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.

இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.