இலங்கை

“உலகின் பல நாடுகளும் பின்பற்றும் சமத்துவமான ஆட்சி முறைகளையே நாங்கள் கோருகிறோம். அதனை யாரும் மறுக்க முடியும் என நான் நினைக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது நாட்டில் 70 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினை இருக்கின்றது. ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமான பிரச்சினை என்பது மிக இலகுவான பிரச்சினையல்ல, மிகவும் கடினமான பிரச்சினையாகும்.

புதிய பாராளுமன்றம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. அதை எதிர்பார்த்து நாங்கள் எங்களை தயார்படுத்த வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் நாம் அநீதியாக எதையும் கேட்கவில்லை. எமது உரிமைகளையே நாம் கேட்கின்றோம்.

நாங்கள் ஒரு தனிப்பட்ட மதம், கலாசாரத்தினைக்கொண்ட ஒரு இனம். விசேடமாக தமிழ் மக்கள் சொந்தக்கலாசாரம், எங்களுக்கென கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், மொழி, சமயம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தேசிய இனமாவோம். அவ்விதமான இனத்திற்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தன்னுடைய கருமங்களை தானே கண்காணித்துக்கொள்கின்ற தான் சரித்திர ரீதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசங்களில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்துவந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுண்டு.

அந்த அடிப்படையில்தான் பல நாடுகளில் சமத்துவத்தின் அடிப்படையில் சமாந்தரமாக வாழ்கின்றோர் மத்தியில் ஆட்சி முறையே பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. இதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். அதை எங்களுக்கு மறுக்க முடியுமென நான் நினைக்கவில்லை. இன்று சர்வதேச ரீதியாக விஷேடமாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்ற கருத்தை மிகவும் உறுதியாக முன்வைத்து வருகின்றார்கள்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் எங்களது சம்மதம் இல்லாமல் நாங்கள் ஆட்சிசெய்யப்படுகின்றோம். 1956ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமுறையை மாற்றியமைக்கவேண்டும் என்று தமது ஜனநாயக முடிவுகள் மூலமாக தீர்ப்பளித்துள்ளனர். அது அமுல்படுத்தப்படவில்லை.” என்றுள்ளார்.

 

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.