இலங்கை

பொது மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்போடு, பொதுத் தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

யாழில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவே நாம் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளோம். வவுனியாவுக்கும் செல்ல நாம் தீர்மானித்துள்ளோம்.

தற்போது நாம் கொரோனா சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறோம். இது நாடளாவிய ரீதியான ஒரு தேசியப் பிரச்சினையாகத்தான் காணப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனம் என்று இந்த வைரஸ் தொற்று இல்லை எனக் கூறுகிறதோ, அதுவரை இதன் தாக்கத்திற்கு நாம் முகம் கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலைக் காணப்படுகிறது.

இந்த நிலையில், எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது குறித்து நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம்.

அதாவது தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடத்தவே நாங்கள் முயற்சிக்கின்றோம்

அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே, சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் தேர்தல் வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அந்த நபருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்க பொலிஸார் தயாராகவே உள்ளனர் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றுள்ளார்.

 

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.