இலங்கை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரினதும் நிகழ்ச்சி நிரல் ஒன்றே என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி விசனம் வெளியிட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்கள் இன்று தமது தனித்துவத்தை இழந்து, பயணித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமாயின், மாற்றுத்தலைமை ஒன்றை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் நினைத்துள்ளது. அதன் பிரகாரம் தான், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியில் வந்து நிற்கின்றார்.

தயவு செய்து மக்களை திசை திருப்பி, மக்களின் வாக்குப் பலத்தை திசை திருப்பும் வேலையை நீங்கள் செய்ய வேண்டாம். கடந்த காலங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்ட பணி என்ன?

வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி இன்று வெளியில் வந்து விடுதலைப் புலிகள் உங்களுடன் இருந்ததாக சொல்கின்றீர்கள், நீங்கள் எவற்றைக் கதைத்தீர்கள் என்பது எமக்குத் தெரியும். நாங்கள் உங்களுடன் என்னத்தைக் கதைத்தோம் என்று உங்களுக்கும் தெரியும்.

நாங்கள் உங்களுடன் கதைத்திருக்கின்றோம் என்றால், நாங்கள் யுத்தத்தின் இறுதியில் சம்பந்தன் அவர்களுடன் கதைத்திருக்கமாட்டோம் என்று எவ்வாறு சொல்கின்றீர்கள்.

யுத்தம் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகள் சார்பாக நாங்கள் அதைச் சொல்கின்றோம். தமிழர்கள் தனித்துவமான இனம். தமிழர்களுக்கு யார் தலைவராவது என்பதே இங்குள்ள பிரச்சினை. தலைவர் பிரகாரனின் பின்னர், யார் அந்த முடியைச் சூடுவது என்பதே இங்குள்ள பிரச்சினை. ஒரு வருடத்தின் பின்னர், கஜேந்திரகுமார் ‘நான் தான் தலைவர்’ என்று தனது தலையைக் காட்டிவிட்டார். அதற்குத் தகுதி வேண்டும். தலைவர் ஆக வேண்டுமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது, தலைவர் உங்களை (கஜேந்திரகுமாரை) தலைவர் ஆக்கியிருப்பார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அடுத்தாக நீதியரசராக இருந்த ஒரு மனிதரை நம்பிக்கொண்டு வந்தார். அவர் அப்போது தான், யாழ்ப்பாணத்திற்கு வந்தார். அதற்கு முன்னர் கோவில் கும்பிடவந்து போன ஒருவர் தான் சீ.வி.விக்னேஸ்வரன்.

‘தம்பி பிரபாகரன்’ என்றே சொல்வார் விக்னேஸ்வரன், தலைவர் பிரபாகரன் என்று சொல்லமாட்டார். கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் இருவரும் ஒரு நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றார்கள். யார் தலைவர் ஆகுவதென்று ஒரு போட்டி காணப்படுகின்றது. தலைவர் ஆகுவதற்கு சில தகுதிகள் உள்ளன.” என்றுள்ளார்.

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.