இலங்கை

எதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்புக் கடமையில் 75 ஆயிரம் பொலிஸார், 9 ஆயில் சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 84 ஆயிரம் பேரை சேவையில் ஈடுபடுத்த பொலிஸ் தீர்மானித்துள்ளது. 

அது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.” என்றுள்ளார்.

அதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 5000ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் எந்தவொரு வன்முறை சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.