இலங்கை

பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன் பின்னர் தேர்தல் இடம்பெறும் தினம் வரை அமைதிக் காலம் பேணப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் எஸ். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு 12,985 நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள், 71 நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இதற்காக 2,820 வாக்கு எண்ணும் மண்டபங்கள் அமைக்கப்படும்.

தேர்தல் கடமைகளில் பொலிஸார் உள்ளிட்ட 3 1/2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொரோனா தொற்று நிலைமையுடன் எதிர்நோக்கிய மட்டுப்பாடுகள் காரணமாக வீடு வீடாகச் சென்று வாக்குகளை இரந்து கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் 2020.08.03ஆம் திகதி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், நடைமுறை சட்டத் தடங்கல்கள் காரணமாக, அதனை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் 05ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.