இலங்கை

நாட்டினது பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்காத ராஜபக்ஷக்களுக்கு ஆட்சி செய்வதற்கு உரிமையில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத அரசாங்கத்திற்கு வாக்களிப்பதில் எதுவித நன்மையும் இல்லை.

தற்போதைய அரசாங்கம் 7 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இழந்துள்ளது. ஆனால் அவர்களால் அதனை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அவ்வாறானவர்களினால் எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே தற்போதைய அரசாங்கத்திற் தொடர்ந்தும் ஆட்சியமைக்கும் உரிமை இல்லை.

அவர்கள் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்து விட்டது. எனவே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களை ஆட்சியாளர்களாக தெரிவு செய்யும் போது நாடு அபிவிருத்தி பாதையை நோக்கி செல்லும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.