இலங்கை

பொதுத் தேர்தலில் தவறாது வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் தமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான நிலைப்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரட்ணஜீவன் கூல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது. உண்மையில் மக்கள் இது தொடர்பில் அச்சப்பட தேவையில்லை.

நாங்கள் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று தடுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எம்மைப் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு வாக்களிப்பினை மேற்கொள்வது தொடர்பாக மாதிரி வாக்களிப்பினை பரீட்சித்துப் பார்த்திருக்கிறோம்.

தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடியில் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று ஏற்படகூடிய சாத்தியக்கூறு குறைவானதாகவே இருக்கும். அதாவது நீங்கள் வீதியில் பயணிக்கும் போதோ அல்லது தங்களுடைய அன்றாட கடமைகளை செய்யும் போதோ கொரோனா தோற்று ஏற்படுகின்ற வாய்ப்பை விட வாக்களிப்பு நிலையத்திற்குள் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறு மிகவும்குறைவாகவே காணப்படுகின்றது.

அத்தோடு நீங்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் செல்லும் போது மாஸ்க் அணிந்து கைகளை கழுவி ஏனையோர் பாவித்த பேனைகளை பாவிக்காத வகையில் பல சுகாதார நடைமுறைகளை வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொண்டுள்ளோம்.

வீதிகளில் நடமாடும் போது ஏற்படும் தொற்றுக்குரிய வாய்ப்பினை விட வாக்களிப்பு நிலையத்தில் மிகவும் குறைவானது. எனவே உங்களுக்குரிய வாக்களிப்பு உரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.