இலங்கை

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்த நிவாரணமும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாளாந்தம் ஊதியம் பெறுபவர்கள், நிரந்தர வருமானம் இன்றி இருப்பவர்கள், வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் சாதாரண மக்கள் என அனைவரும் தங்களது பொருளாதாரத்தை சீர்செய்து கொள்வதற்காக மாதத்திற்கு 20ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்போம்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலக்கட்டத்தில் அதிகமான மின்பாவனையினால், அதிகரிக்கப்பட்ட மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணங்களை செலுத்தியவர்களின் கட்டணத்தொகையை எமது ஆட்சியில் மீளப் பெற்றுக்கொடுப்போம். அதுமட்டுமன்றி நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றி 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்.

தொடர்மாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்துவரும் மக்களின் வீட்டு உரிமைப்பத்திரம் தொடர்பாகவும் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதுடன் அனைவருக்கும் உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்போம்.

சஜித் பிரேமதாசவின் வாக்குறுதிகள் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள். நான் கட்டாயம் எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகன் என்றவகையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதுவரையிலும் இல்லாத சாதாரண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து, அவர்கள் மீது இரக்கத்துடன் செயற்படக்கூடிய அரசாங்கத்தை நான் உருவாக்குவேன்.” என்றுள்ளார்.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.