இலங்கை

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்கெடுப்பு, இன்று புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 71 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. 

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை வியாழக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. முதல் முடிவு மதியத்துக்கு முன்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு,

அம்பாந்தோட்டை 76%
மொனராகலை 75%
மாத்தளை 72%
பொலன்னறுவை 72%
கண்டி 72%
இரத்தினபுரி 71%
காலி 70%
அனுராதபுரம் 70%
புத்தளம் 64%
கொழும்பு 67%
காலி 68%
கண்டி 67%
அம்பாறை 72.8%
யாழ்ப்பாணம் 67.7%
கிளிநொச்சி 71.52%
மன்னார் 79.49%
வவுனியா 74%
முல்லைத்தீவு 76.25%
திருகோணமலை 73.5%
மட்டக்களப்பு 76.15%
நுவரெலியா 75%

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.