இலங்கை

‘தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உரிமை கோர முடியாது. அதனை பொதுத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன’ என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ், “கடந்த பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. இது, தமிழ் மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் வகையில் ஐ.தே.க.வின் ஆட்சியை பாதுகாப்பதற்காக சட்டம் உள்ளிட்ட அரசியல் ஆலோசனைகளை கூட்டமைப்பே வழங்கி வந்தது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை. ஆட்சிக்கால பெரும்பான்மையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழங்கி வந்தது. இதனைவிட, 13வது திருத்தம் ஊடாக மாகாண சபைக்கு 36 அதிகார கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவற்றை சரியாகப் பயன்படுத்தவில்லை.” என்றுள்ளார்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.