இலங்கை

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வியை கண்டு நாம் மகிழ்ச்சியடையப்போவதில்லை. இப்போது ஒன்றுபடுவதற்கான சிறந்த வாய்ப்பு. எனவே எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றோம். ஆனால், அவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை பதவிகளுக்கு நியமிக்க விரும்பினால், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். மாகாண சபைத் தேர்தல்களில் எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சியை அழைக்கிறோம். இந்த கட்சி பிளவுபட வேண்டியதில்லை. கட்சியை முறித்துக் கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாக தொடரும் மற்றும் வலுவான எதிர்க்கட்சியாகவும் பாராளுமன்றில் செயற்படும்.” என்றுள்ளார்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.